எடப்பாடி பழனிசாமி அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம்

Nov 16 2018 6:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

எடப்பாடி பழனிசாமி அரசைக்‍ கண்டித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி நகர தந்தை என்று போற்றபடும் அமரர் குருஸபர்ணாந்தின் 150வது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வலியுறுத்தி, தமிழ்நாடு பாண்டிச்சேரி மீனவர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மீனவர்களுக்கு தனி தொகுதி அறிவிக்க வேண்டும் என்றும், மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் விடப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்ட அனைத்து மருந்தாளுனர்கள் சங்கம் சார்பாக, அரசின் சுகாதார துறையைக்‍ கண்டித்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பாக நடைபெற்றது. அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருந்தாளுனர்களின் பணி நியமனம் செய்யப்படவேண்டும் உள்ளிட்ட இரண்டு அம்ச கோரிக்கைகள் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.

ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், தேவை இல்லாத பணியிடங்களை ரத்து செய்யும் அரசாணை எண் 56-ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த அரசாணையால் புதிதாக பணிக்கு வருபவர்களின் உரிமையை பறிக்கும் என்பதால், அதனை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் முன்பு, 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து அரசு மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணிபுரியும் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகள் போராட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00