கஜா புயல் பாதிப்பை கணக்‍கிட்டு பாதிக்‍கப்பட்டோரின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்‍க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Nov 16 2018 6:19PM
எழுத்தின் அளவு: அ + அ -

கஜா புயல் சேத மதிப்பீட்டை விரைவாக கணக்‍கிட்டு பாதிக்‍கப்பட்டோரின் வாழ்வாதாரத்தை முழுமையாக மீட்டெடுக்‍க வேண்டுமென கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்‍கையில், எதிர்பார்த்ததைக்‍ காட்டிலும் கஜா புயல் தமிழகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாகக்‍ கூறியுள்ளார். புயல் செல்லும் வழித்தடமான தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மீனவர்களின் படகுகள் பெரும் சேதத்திற்குள்ளாகியும், மூழ்கியும், மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிக்‍கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

டெல்டா மாவட்டங்களிலும் பல்லாயிரக்‍கணக்‍கான ஏக்‍கர் பயிர்களும் மரங்களும், வேளாண் உற்பத்தியும் முற்றிலுமாக சேதமாகியுள்ளது - பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், மீட்புப் பணிகளை போர்க்‍கால அடிப்படையில் துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

அதேசமயத்தில், சேதம் குறித்த கணக்‍கீட்டுப் பணியை காலதாமதமின்றி மேற்கொண்டு மத்திய அரசிடம் அதற்கான உதவிகளை பெற்று, கஜா புயலால் பாதிக்‍கப்பட்டவர்களை, முழுமையாக ​மீட்டெடுக்‍கும் பணியை தமிழக அரசு உடனடியாக செய்திட வேண்டும் என்றும் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00