கஜா புயலின் கோரத்தாண்டத்தால் நாகை ரயில் நிலையம் முற்றிலும் சேதம்

Nov 16 2018 6:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

கஜா புயலின் கோரத்தாண்டத்தால், நாகை ரயில் நிலையம் முற்றிலும் சேதமடைந்துள்ளது.

நாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் மேற்கூரைகள் காற்றில் அடித்துச்செல்லப்பட்டு முற்றிலும் சேதமடைந்துள்ளது. ரயில்வே நடைமேடைகள், சிக்னல்கள், பயணிகள் காத்திருப்பு அறை என அனைத்து பகுதிகளும் சேதமடைந்துள்ளதால் நாகையில் ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. காரைக்கால் மற்றும் நாகூர் ரயில் நிலையங்களும் கஜா புயலின் கோரத்தாண்டவத்திற்கு தப்பவில்லை. புயல் கரையைக் கடந்தபோது வீசிய சூறைக்காற்றினால், தண்டவாளத்தில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து கிடப்பதால் அப்பகுதிகளில் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.

திருச்சியில் இருந்து ஈரோடு செல்லும் பயணிகள் ரயில் மின் கோளாறு காரணமாக திருப்பராய்த்துறை அருகே நிறுத்தப்பட்டு இரண்டு மணி நேர தாமதத்திற்கு பின் புறப்பட்டு சென்றது. இதேபோன்று, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து திருச்சி வழியாக சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் மின்சாரம் இல்லாததால் சிறுகமணி அருகே நிறுத்தப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00