மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துவிட்டது - திருச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக்‍ கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு

Dec 4 2018 6:16PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரதமர் திரு. நரேந்திர மோடி, தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் இழைத்து வருவதாக திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசைக்‍ கண்டித்து, திருச்சியில் இன்று, திமுக மற்றும் கூட்டணிக்‍ கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் திரு. மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் திரு. வைகோ, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர். இக்‍கூட்டத்தில் பேசிய திரு. மு.க. ஸ்டாலின், தன் மீதான ஊழல் வழக்குகளை எதிர்த்து, உச்சநீதிமன்றம் சென்ற எடப்பாடி பழனிசாமி, மேகதாது விவகாரத்தில் தமிழக மக்களை வஞ்சித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

எடப்பாடி பழனிசாமி ஆட்சி அடிமை ஆட்சியாக நடைபெறுவதாக திரு. வைகோ உணர்ச்சிப் பெருக்‍குடன் பேசியபோது, சலசலப்பை ஏற்படுத்தும் வகையில் திமுக தொண்டர்கள் பேசிக்‍கொண்டிருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த வைகோ, தனது தொண்டர்களைப் பார்த்து அவர்களை தூக்‍கி எறியுங்கள் என கோபத்துடன் பேசினார்.

தமிழக மக்கள் மீதும் விவசாயிகள் மீதும் நயவஞ்சகத் தோடு பிரதமர் திரு. நரேந்திர மோடி செயல்படுகிறார் என்றும், தமிழகத்துக்கு துரோகம் விளைவிக்‍கும் மத்திய அரசுக்‍கு, எடப்பாடி பழனிசாமி துணைபோவதாக மார்க்‍சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் திரு. பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண நிதி அளிப்பதில், கமிஷன் அடிப்பது மட்டுமே எடப்பாடி பழனிசாமி குறிக்‍கோளாகக்‍ கொண்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் திரு. முத்தரசன் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3196.00 Rs. 3418.00
மும்பை Rs. 3219.00 Rs. 3409.00
டெல்லி Rs. 3233.00 Rs. 3424.00
கொல்கத்தா Rs. 3233.00 Rs. 3421.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 43.60 Rs. 43600.00
மும்பை Rs. 43.60 Rs. 43600.00
டெல்லி Rs. 43.60 Rs. 43600.00
கொல்கத்தா Rs. 43.60 Rs. 43600.00