நெல் ஜெயராமன் மறைவுக்‍கு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் அஞ்சலி - சொந்த ஊரில் இறுதிச்சடங்கிற்கு ஏற்பாடு

Dec 6 2018 3:22PM
எழுத்தின் அளவு: அ + அ -
பிரபல வேளாண் ஆர்வலர் நெல் ஜெயராமனின் மறைவுக்‍கு, அரசியல் கட்சி பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் என்ற ஊரை சேர்ந்த நெல் ஜெயராமன், புகழ்பெற்ற வேளாண் ஆர்வலர் ஆவார்.அழிந்துபோன பாரம்பரிய நெல் ரகங்களை கண்டுபிடித்து அவற்றை சேகரிப்பதில் தீவிரம் காட்டினார். கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய்க்‍கு சிகிச்சை பெற்று வந்த அவர், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தேனாம்பேட்டையில் உள்ள ரத்தினா நகரில் பொதுமக்‍களின் அஞ்சலிக்‍காக வைக்‍கப்பட்டுள்ள நெல் ஜெயராமனின் உடலுக்‍கு அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ உள்ளிட்ட பலர், ஜெயராமன் மறைவுக்‍கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். நெல் ஜெயராமனின் இறுதிச்சடங்கு, அவரது சொந்த ஊரான திருத்துறைப்பூண்டியில் நாளை நடைபெறுகிறது.

169 அரிய வகை நெல் விதைகளை சேகரித்து விவசாயிகளுக்‍கு உற்ற பாதுகாவலனாக இருந்து வந்த நெல் ஜெயராமன், பல்வேறு தேசிய மற்றும் மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00