நெல் ஜெயராமன் மறைவுக்‍கு டிடிவி தினகரன் இரங்கல் - உலக விவசாயிகளின் பார்வையை டெல்டாவின் பக்‍கம் திரும்பச்செய்தவர் என்றும் புகழாரம்

Dec 6 2018 3:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
இயற்கை விவசாயி திரு. நெல் ஜெயராமன் மறைவுக்கு கழக‍ துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இயற்கை விவசாயி திரு. நெல் ஜெயராமன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்திகேட்டு ஆற்றொனா துயரமடைந்ததாகக்‍ குறிப்பிட்டுள்ளார்.

பாரம்பரிய நெல் வகைகளை மீட்கும் பொருட்டு தனது வாழ்வை அர்ப்பணித்து 150க்கும் மேற்பட்ட நெல் வகைகளை மீட்டெடுத்த ஒரு சாதனையாளர் என்றே அவரை சொல்லலாம்- நோயின் தாக்கம், கடுமையாக அவரை பாதித்தபோதும், தனது லட்சியத்தை விட்டுவிடாமல் அதற்காக உழைத்திட்ட தூயவர் திரு.நெல் ஜெயராமன் என திரு.டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

லட்சக்கணக்கான விவசாயிகளை இயற்கை சாகுபடி முறையில் விவசாயத்தில் ஈடுபடவைத்து, உற்பத்தியை பெருக்கி அதனை சந்தைப்படுத்தியதன் மூலமாக உலக விவசாயிகளின் பார்வையை டெல்டாவின் பக்கம் திரும்பச் செய்தவர் திரு.ஜெயராமன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இயற்கை விவசாயத்தையும், வேளாண்மையையும், பாதுகாக்க வேண்டும் என்பது ஒரு சமூக விழிப்புணர்வாக உருப்பெற்றுவரும் இச்சூழலில், திரு.நெல் ஜெயராமனின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு- அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00