மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தவுடன் 45 மாதங்களில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் மத்திய சுகாதாரத்துறை அறிக்‍கை தாக்‍கல்

Dec 6 2018 4:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்தவுடன் இன்னும் 4 வருடங்களில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

டெல்லியில் அமைந்திருக்‍கும் உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனையை நாட்டின் பிற முக்‍கிய நகரங்களிலும் ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் இந்த மருத்துவமனை அமைப்பதற்கான இடங்கள் கண்டறியப்பட்டு, முடிவில் மதுரையில் அதனை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகும், அதற்கான பூர்வாங்க பணிகள் எதுவும் நடைபெறாததால் இதுதொடர்பான அரசாணை வெளியிட வலியுறுத்தி, கே.கே ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்‍கிளையில் வழக்‍கு தொடர்ந்தார். இந்த வழக்‍கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பான அறிக்‍கையை தாக்‍கல் செய்ய மத்திய அரசுக்‍கு உத்தரவிட்டது. இந்த நிலையில் இன்று இந்த வழக்‍கு மீண்டும் விசாரணைக்‍கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் சுகாதாரத்துறை அறிக்‍கை தாக்‍கல் செய்தது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் கிடைத்த பிறகு, 45 மாதங்களில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்‍கப்படும் என அதில் தெரிவிக்‍கப்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3369.00 Rs. 3526.00
மும்பை Rs. 3489.00 Rs. 3311.00
டெல்லி Rs. 3313.00 Rs. 3491.00
கொல்கத்தா Rs. 3313.00 Rs. 3491.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 44.50 Rs. 44500.00
மும்பை Rs. 44.50 Rs. 44500.00
டெல்லி Rs. 44.50 Rs. 44500.00
கொல்கத்தா Rs. 44.50 Rs. 44500.00