வீதிமுறை மீறல் தொடர்பான வழக்கில் அமைச்சர் விஜய பாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவு

Dec 6 2018 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -
வீதிமுறை மீறல் தொடர்பான வழக்‍கில் அமைச்சர் திரு.விஜய பாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜன் செல்லப்பாவிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

புதுக்‍கோட்டை மாவட்டம் இலுப்பூர் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் இரு சக்கர வாகனங்களில், ஹெல்மெட் அணியாமல் சென்றனர். இது தொடர்பாக நடவடிக்‍கை எடுக்‍க வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சமூக ஆர்வலர் திரு. டிராபிக்‍ ராமசாமி வழக்‍கு தொடர்ந்திருந்தார். அமைச்சர் திரு. விஜய பாஸ்கர் உள்ளிட்டோர் தலைகவசம் அணியாமல் சென்றிருந்தது தெரிந்திருந்தும் இலுப்பூர் காவல்துறையினர் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜன்செல்லப்பா தலைமையில் கடந்த நவம்பர் 8ம் தேதி சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையில் நடைபெற்ற திடீர் போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் திரு.சசிதரன், திரு.ஆதிகேசவலு அமர்வு அமைச்சர் திரு.விஜயபாஸ்கர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜன் செல்லப்பாஆகியோருக்கு நோடீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணை வரும் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Wed,Sat : 19:00

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • KALLADATHU ULAGALAVU

    Sat : 17:30

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

  • ADUKALAM - Jayaplus

    Sun : 10:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3024.00 Rs. 3234.00
மும்பை Rs. 3046.00 Rs. 3226.00
டெல்லி Rs. 3059.00 Rs. 3240.00
கொல்கத்தா Rs. 3059.00 Rs. 3237.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 40.60 Rs. 40600.00
மும்பை Rs. 40.60 Rs. 40600.00
டெல்லி Rs. 40.60 Rs. 40600.00
கொல்கத்தா Rs. 40.60 Rs. 40600.00