கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிறிஸ்துமஸ் திருநாளினை முன்னிட்டு வரும் 23-ம் தேதி நடைபெறும் மதநல்லிணக்க மாநாடு : கழக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பங்கேற்கிறார்

Dec 18 2018 6:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில், கிறிஸ்துமஸ் திருநாளினை முன்னிட்டு வரும் 23-ம் தேதி நடைபெறும் மதநல்லிணக்‍க மாநாட்டில் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கலந்துகொண்டு தலைமையுரையாற்றி கிறிஸ்துமஸ் பரிசுகள் வழங்க இருப்பதாக அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் அறிவித்துள்ளது.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக தலைமைக்‍கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகெங்கும் வாழும் கிறிஸ்தவ பெருமக்‍கள் உவகையுடன் கொண்டாடும் கிறிஸ்துமஸ் திருநாளினை முன்னிட்டு, அருமனை கிறிஸ்தவ அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் பெருவிழா மற்றும் மதநல்லிணக்‍க மாநாட்டிற்கு தலைமை ஏற்க வேண்டும் என்ற அழைப்பினை ஏற்று, கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், வரும் 23-ம் தேதி மாலை 6 மணியளவில், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெறும் மதநல்லிணக்‍க மாநாட்டில் கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றி, கிறிஸ்துமஸ் பரிசுகளை வழங்க இருப்பதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், தலைமைக்‍கழக நிர்வாகிகள், மாவட்டக்‍கழகச் செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்‍கள் பெருந்திரளாக கலந்துகொள்ளுமாறு கேட்டுக்‍கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00