தி.மு.க முன்னாள் மேயர் கொலை வழக்‍கில் கார்த்திகேயனை 26-ம் தேதி வரை நீதிமன்றக்‍ காவலில் வைக்‍க உத்தரவு - முக்‍கிய தடயங்கள் சிக்‍கியுள்ளதாக சி.பி.சி.ஐ.டி போலீசார் தகவல்

Aug 12 2019 7:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெல்லை தி.மு.க முன்னாள் மேயர் உட்பட 3 பேர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயனை வரும் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி உட்பட 3 பேரை கொலை செய்த வழக்கில் கைதான கார்த்திகேயனை சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். போலீஸ் காவல் முடிவடைந்து அவரை நீதிபதி கடற்கரைசெல்வம் வீட்டில் ஆஜர்படுத்தினர். கார்த்திகேயனை வருகிற 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் கார்த்திகேயன் அடைக்கப்பட்டார்.

சிபிசிஐடி விசாரணையில், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உமாமகேஸ்வரியிடம் சீனியம்மாள் 50 லட்சம் ரூபாய் வழங்கியது குறித்து ஒரு சில தகவல்களை கார்த்திகேயன் தெரிவித்துள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் வீட்டில் இருப்பதாகவும் கார்த்திகேயன் தெரிவித்ததால், அவரது வீட்டில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்த கொலைகள் தொடர்பாக கார்த்திகேயன் தாய் சீனியம்மாள், உமாமகேஸ்வரியின் மகள் மற்றும் மருமகன் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00