பஞ்சலோக சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற வழக்கு - கைது செய்யப்பட்ட பிரான்ஸ் பெண் மேரி தெரசா சிறையில் அடைப்பு

Aug 13 2019 12:23PM
எழுத்தின் அளவு: அ + அ -
பஞ்சலோக சிலைகளை வெளிநாட்டிற்கு கடத்த முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட புதுச்சேரி பெண் மேரி தெரசா வனினா ஆனந்தி, இன்று கும்பகோணம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

புதுச்சேரி கோலாஸ் நகரில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில், வெளிநாட்டுக்கு கடத்தப்பட இருந்த பழமையான 11 பஞ்சலோக சிலைகளை கடந்த 2016-ம் ஆண்டு, ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து, ஏற்றுமதி நிறுவனத்தின் உரிமையாளரான மேரி தெரசா வனினா ஆனந்தி, ஃபிரான்சுக்‍கு தப்பிச்சென்றார். பின்னர் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க எண்ணி, உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் முன்ஜாமீன் கோரினார். ஆனால் அவரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மேரி தெரசாவுக்கு எதிராக, விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரான்சிலிருந்து சென்னை விமான நிலையம் வந்த, மேரி தெரசாவை கைது செய்த போலீசார், சிலைகடத்தல் தடுப்பு பிரிவினரிடம் அவரை ஒப்படைத்தனர். இதையடுத்து, மேரி தெரசா கும்பகோணம் நீதிமன்ற நீதிபதி மாதவ ராமானுஜம் முன்பு இன்று ஆஜர்படுத்தப்பட்டார். மேரி தெரசாவை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அவர் திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00