ஜெயா தொலைக்காட்சி 21-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மிகுந்த மகிழ்ச்சி - ஜெயா டிவியின் வெற்றிகரமான பயணம் தொடரட்டும் - அ.ம.மு.க. செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து
Aug 22 2019 10:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜெயா தொலைக்காட்சி இருபத்தோராம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், ஜெயா டிவியின் வெற்றிகரமான பயணம் தொடரட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவராக, ஏழை-எளிய மக்களின் உயர்வுக்காக எப்போதும் சிந்தித்த புரட்சித்தலைவி அம்மாவின் திருப்பெயரைத் தாங்கி வெற்றி நடைபோட்டு வரும் ஜெயா டிவி இருபத்தியோராம் ஆண்டில் அடி எடுத்து வைப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
எல்லாத் தரப்பு மக்களும் விரும்புகிற காட்சி ஊடகமாக 20 ஆண்டுகள் பயணித்து வந்திருப்பது பாராட்டுக்குரியது - அதே நேரத்தில் அம்மாவின் மக்கள் நலக்கொள்கைகளுக்கான குரலாகவும் இத்தொலைக்காட்சி திகழ்ந்து வருவது பெருமிதம் தருகிறது என திரு. டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இனி வருகிற ஆண்டுகளிலும் ஜெயா டிவியின் வெற்றிகரமான பயணம் தொடரட்டும் - இந்த நன்னாளில் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும், பணியாளர்களுக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக திரு. டிடிவி தினகரன், தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.