வேதாரண்யத்தில் வன்முறை தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது: பதற்றம் காரணமாக போலீஸ் குவிப்பு

Aug 26 2019 8:22AM
எழுத்தின் அளவு: அ + அ -

வேதாரண்யத்தில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தை, ஒரு பிரிவினர் தாக்கி தீ வைத்து எரித்தனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில், காரில் சென்று கொண்டிருந்த ஒருவர், சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றதால், அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்து, கடுமையாக தாக்கினர். ஒருகட்டத்தில், அந்தக் காரை தீ வைத்து எரித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து, மற்றொரு பிரிவினர் எதிர்த் தாக்குதல் நடத்தினர். இதனால், காவல் நிலையத்தில் இருந்த காவலர்கள், மோதலைத் தடுக்க முயன்றனர். அப்போது, காவல்நிலைத்தின் மீது கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், அந்தப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த மோதலைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதனிடையே, அங்கிருந்த அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இதனால், மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில், காயம் அடைந்த இரண்டு பேர் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை தொடர்ந்து சென்ற இரு பிரிவினரும், அரசு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பையும் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர். திருச்சி மண்டல ஐஜி வரதராஜுலு தலைமையில், போலீசார் ஆலோசனை மேற்கொண்டனர். மாவட்டத்தின் மற்ற இடங்களில் இருந்தும் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இடிக்கப்பட்ட அதே இடத்தில் அம்பேத்கர் சிலை மீண்டும் நிறுவப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00