மத்திய அரசைக் கண்டித்து தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம் : பல்வேறு கட்சியினரும் போராட்டத்தில் பங்கேற்பு

Aug 26 2019 1:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

இஸ்லாமிய விரோத சட்டங்களை நிறைவேற்றிவரும் மத்திய அரசைக் கண்டித்து, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்‍ கழகம் சார்பில், பல்வேறு இடங்களில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

முத்தலாக், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, என்ஐஏ, யு.ஏ.பி.ஏ உள்ளிட்ட இஸ்லாமியர்கள் மீதான மத்திய பாஜக அரசின் அடக்குமுறை ஆகியவற்றை கண்டித்து, சென்னை சேப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.திருமுருகன் காந்தி, திமுக அமைப்பு செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழுத் தலைவர் திரு.ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, மத்திய அரசின் நடவடிக்‍கைகளுக்‍கு கண்டனம் தெரிவித்தனர்.

மதுரை பழங்காநத்தத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் அக்‍கட்சியின் மாநில பொதுச்செயலாளர் திரு. அப்துல் சமது, ம.தி.மு.க. தொழிலாளர் அணியை சேர்ந்த திரு. மகபூப் ஜான் உள்ளிட்டோரும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்களும் கலந்து கொண்டனர். தமிழகத்தில் நுழைந்துள்ளதாக கூறப்படும் தீவிரவாதிகளை தேடி பிடித்து கைது செய்ய வேண்டும் என்றும், தவறான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரு.அப்துல் சமது வலியுறுத்தினார்.

தமுமுக சார்பில், திருச்சி மேலசிந்தாமணி அண்ணாசிலை அருகே மண்டல அளவிலான கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட செயலாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர்.

திருப்பூர் எம்.ஜி.ஆர். சிலை அருகில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பா.ஜ.க. அரசின் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பிரிவு ரத்து, சிறுபாண்மை மக்கள் விரோத போக்கை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் பூவிழுந்த நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மதகடி கிராமத்தில், சீரான குடிநீர், தெருவிளக்‍கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக்‍கோரி, அப்பகுதி மக்‍கள் காலிக்குடங்களுடன் காட்டுமன்னார்கோயில் மோவூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கடைகம்பட்டி கிராம பகுதியில், குதிரை பந்தயம் மைதானம் அமைக்க ஆய்வு செய்ய வந்த அரசு அதிகாரிகளையும், மெட்ராஸ் ரேஸ் கிளப் அதிகாரிகளையும் அப்பகுதி மக்‍கள் முற்றுகையிட்டனர். தங்கள் பகுதிகளில் உள்ள கோயில்கள், மயானம் உள்ளிட்ட பகுதிகளில் எந்தவித நடவடிக்‍கையும் எடுக்‍கக்‍கூடாது என கோஷமிட்டு, அதிகாரிகளின் வாகனங்களை சிறைபிடித்தனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட கலவரத்தில் அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை கண்டித்தும், சிலையை உடைத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பல்வேறு பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அம்பேத்கர் அமைப்புகள் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00