கோவையில் 2 திருமணங்களை மறைத்து 3-வது திருமணம் செய்ய முயன்ற நபர் - சாலையிலேயே அடித்து உதைத்த மனைவிகள்

Sep 10 2019 8:25PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவை மாவட்டம், சூலூர் அருகே, மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற நபரை முதல் இரண்டு மனைவிகளும் அடித்து உதைத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சூலூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் தினேஷ் என்பவருக்கும், திருப்பூர் கணபதி பாளையத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமான 15 நாட்களிலேயே அரவிந்த் அடித்து கொடுமைப்படுத்தியதால், பிரியதர்ஷினி அவரை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இதனிடையே, அரவிந்த் தினேஷ் இணையதளம் மூலம் கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்த அனுப்பிரியா என்பவரை, முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இரண்டாவது மனைவி அனுப்ரியாவையும், முதல் மனைவியை கொடுமைப்படுத்தியது போன்றே இவரையும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அனுப்பிரியாவும், அரவிந்தை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். தற்போது அரவிந்த் மீண்டும், மணமகள் தேடி இணையதளத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்த தகவலை அறிந்த முதல் மனைவி பிரியதர்ஷினியின் குடும்பத்தினரும், இரண்டாவது மனைவி அனுப்பிரியாவின் குடும்பத்தினரும், அரவிந்த் தினேஷை சரமாரியாக அடித்து உதைத்தனர். தகவலறிந்து வந்த போலீசார், அரவிந்த் தினேஷை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00