ஒரே ரேஷன் கார்டு திட்டம் - சென்னையில் அனைத்து மாவட்ட வழங்கல் அதிகாரிகளுடன் உணவுத்துறை உயரதிகாரிகள் ஆலோசனை

Sep 12 2019 12:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஒரே ரேஷன் கார்டு திட்டம் தொடர்பாக, சென்னையில் இன்று, அனைத்து மாவட்ட வழங்கல் அதிகாரிகளுடன், உணவுத்துறை உயரதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு மட்டுமே, உணவு வழங்கல் துறை சார்பில், ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. பயனாளிகள், அந்த கார்டை, ரேஷன் கடைகளில் காட்டி, மாதம்தோறும், அரிசி, கோதுமையை இலவசமாகவும், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை, மானிய விலையிலும் பெறலாம். இந்நிலையில், மத்திய அரசு, ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை துவக்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், நாட்டில் எந்த மாநிலத்தில் வசிப்பவரும் எந்த ரேஷன் கடைகளிலும், பொருட்களை வாங்கலாம். இத்திட்டத்தை, தமிழகத்தில் செயல்படுத்த இருப்பதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு, தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.அதேசமயம், 'இலவச அரிசி உள்ளிட்ட, ஏற்கனவே நடைமுறையில் உள்ள, பொது வினியோக திட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில், ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படும் என, தமிழக அமைச்சர்கள், விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை, சேப்பாக்கத்தில், உணவு துறை சார்பில், மாவட்ட வழங்கல் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், இன்று நடக்கிறது. அதில், கூட்டுறவு மற்றும் உணவு துறை, உணவு வழங்கல் துறைகளின் உயரதிகாரிகள் பங்கேற்று, ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு திட்டம் தொடர்பாக முடிவெடுக்க உள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3626.00 Rs. 3783.00
மும்பை Rs. 3650.00 Rs. 3903.00
டெல்லி Rs. 3666.00 Rs. 3914.00
கொல்கத்தா Rs. 3705.00 Rs. 3962.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.40 Rs. 50400.00
மும்பை Rs. 50.40 Rs. 50400.00
டெல்லி Rs. 50.40 Rs. 50400.00
கொல்கத்தா Rs. 50.40 Rs. 50400.00