பச்சை நிறமாக மாறிய மன்னார்வளைகுடா கடல் பகுதி : மீன்கள் செத்து கரை ஒதுங்குவதால் மீனவர்கள் அச்சம்

Sep 12 2019 2:13PM
எழுத்தின் அளவு: அ + அ -
மன்னார்வளைகுடா கடல் பகுதி பச்சையாக நிறம் மாறி, மீன்கள் இறந்து குவியல் குவியலாக கரை ஒதுங்கி வருவதை கண்டு பொது மக்‍கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது தொடர்பாக உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரிய வகை மீன்களின் உயிர்க்கோள காப்பகமாக விளங்கக்கூடிய மன்னார்வளைகுடா கடல் பகுதி நேற்று மாலை திடீரென பச்சை நிறமாக மாறியது. இதனை அடுத்து நள்ளிரவில் இருந்து மீன்கள் இறந்து கரை ஒதுங்கியவாறு உள்ளன. மேலும் கடலில் பச்சை நிறத்தில் திரவம் போல் மிதப்பதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். கடலில் இருந்தும் மயங்கிய நிலையில் வரும் மீன்களை பருந்துகளும் காக்கைகளும் உணவாக்கிக் கொள்வதுடன் அருகிலுள்ள குடியிருப்புகள், மக்கள் பயன்படுத்த கூடிய நீர்நிலைகளில் போடுவதால் நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. கடல் பச்சை நிறமாக மாறியுள்ளது தொடர்பாகவும் மீன்கள் செத்து மிதப்பது தொடர்பாகவும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என மீனவ மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00