காலாவதியான நூடூல்ஸ் சாப்பிட்டதால் மாடுகள் உயிரிழப்பு - நூடுல்ஸ் நிறுவனத்தினரிடம் போலீஸ் விசாரணை

Sep 12 2019 5:33PM
எழுத்தின் அளவு: அ + அ -
புதுச்சேரி அருகே காலாவதியான நூடூல்ஸ் சாப்பிட்டதால், ஒவ்வாமை ஏற்பட்டு 7 மாடுகள் உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதுச்சேரியை அடுத்துள்ள, மொரட்டாண்டி கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் என்ற விவசாயி, ஆடு - மாடுகள் வளர்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய 4 மாடுகள் திடீரென உயிரிழந்தன. அடுத்தநாள் மேலும் இரு மாடுகள் உயிரிழந்தன. சம்பவ இடத்துக்கு சென்ற கால்நடைத் துறை அதிகாரிகள், மாட்டை பரிசோதித்தபோது, மாட்டின் வயிற்றில் காலாவதியான நூடுல்ஸ் இருப்பது கண்டறியப்பட்டது. நூடுல்ஸ்சின் விஷத்தன்மை காரணமாகவே மாடுகள் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது 200 அடி தூரத்தில் காலாவதியான நூடுல்ஸ் கொட்டிக் கிடப்பதை கண்டறிந்தனர். காலாவதியான நூடுல்சை கைப்பற்றிய போலீசார், அந்த நூடுல்ஸ் நிறுவனத்துக்கு தொடர்புடையவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00