மதுரையில் சாப்பிட்ட பானிபூரிக்கு பணம் கேட்ட வடமாநில வியாபாரியை கொலை செய்ய முயன்ற இளைஞர்கள் கைது

Sep 12 2019 8:53PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில், சாப்பிட்ட பானிபூரிக்கு பணம் கேட்ட வடமாநில வியாபாரியை கொலை செய்ய முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவத்தின் பின்னணியை விவரிக்கிறது, இந்த தொகுப்பு...

தன்னை ரவுடியாக காட்டிக்கொண்டு வடிவேலு செய்யும் இந்த காமெடியை போன்று, மதுரையில் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. மதுரை பாண்டிகோவில் அருகே வசித்து வருபவர் தீரஜ் குப்தா. வடமாநிலத்தைச் சேர்ந்த இவர், மதுரை பைபாஸ் பகுதியில், சாலையோரத்தில் பானிபூரி கடை நடத்தி வருகிறார். இவரது பானிபூரி கடைக்கு, பொன்மேனி மற்றும் HMS காலனி பகுதிகளைச் சேர்ந்த விஜய்பாண்டி, செந்தூர்பாண்டி என்ற 2 வாலிபர்கள், நாள்தோறும் வருவது வாடிக்கை.

தினமும் பானிபூரி வாங்கி சாப்பிட்டுவிட்டு கடன் சொல்லிச் செல்லும் இவர்கள், நேற்றைய தினம், மதுபோதையில் சென்று, பானிபூரி சாப்பிட்டுள்ளனர். ஏற்கனவே கடன் பாக்கி இருக்கும் நிலையில், தற்போது சாப்பிட்ட பானிபூரிக்கான 20 ரூபாய் பணத்தையாவது கொடுத்துச் செல்லுமாறு, வியாபாரி தீரஜ்குப்தா கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 2 இளைஞர்களும், மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் வியாபாரியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

உன்னைக் கொன்றால் நாங்கள் ரௌடியாகிவிடலாம் எனக்கூறி கொலை செய்ய முயன்றபோது, சுதாராரித்துக் கொண்ட பானிபூரி வியாபாரி, அவர்களை தடுத்து விரட்டியதால், இருவரும் தப்பியோடினர். பின்னர், தாக்குதலில் படுகாயமடைந்த தீரஜ்குப்தா மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், கொலை முயற்சியில் ஈடுபட்ட விஜய்பாண்டி, செந்தூரபாண்டி ஆகிய இருவரையும் கைது செய்தனர். நடிகர் வடிவேலுவின் காமெடியைப் போல், ரௌடியாக பார்ம் ஆக வேண்டும் என்று கூறிக்கொண்டு விளைவுகளை யோசிக்காமல் இளைஞர்கள் இருவர், பானிப்பூரி வியாபாரியை கொலை செய்ய முயன்ற சம்பவம், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00