நீலகிரியில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க கேஷ் பேக் பெறும் புதிய திட்டம் : ஆட்சியர் தொடங்கிவைத்தார்

Sep 17 2019 1:34PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்க Cash Back பெறும் புதிய திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசன்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பிளாஸ்டிக் தடை அமலில் உள்ளது. அதனையடுத்து தற்போது பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிகள் மற்றும் குளிர்பான பாட்டிகளுக்கும் தடை விதிக்கபட்டுள்ளது. பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்கும் விதமாக கேஸ்பேக் வழங்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அதற்காக உதகை நகராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் பிளாஸ்டிக் மறுசூழற்சி எந்திரங்கள் பொருத்தபட்டுள்ளன. அவற்றின் சேவையை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசன்ட் திவ்யா தொடங்கி வைத்தார். இந்த பிளாஸ்டிக் மறுசுழற்சி எந்திரத்திற்குள் பிளாஸ்டிக் பாட்டிலை செலுத்தும்போது அந்த பாட்டில் சிறு சிறு துகள்களாக மாற்றப்பட்டு அழிக்கப்படுகிறது. முதற்கட்டமாக pay tm வாடிக்கையாளர்கள் பாட்டிலை எந்திரத்தினுள் போடும் போது தங்களது செல்போன் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போது அவர்களது கணக்கில் கிரிடிட் பாயிண்ட்ஸ் கிடைக்கும். அதனை தொடர்ந்து ஒரு பாட்டிலுக்கு 5 ரூபாய் விதம் Cash Back கிடைக்கும். இந்த எந்திரங்கள் மாவட்டத்தின் முக்கிய நுழைவாயில்களில் உள்ள சோதனை சாவடிகளில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00