நடப்பாண்டுக்கான மாநில மின்சார வாகன கொள்கை : தமிழக அரசு வெளியீடு

Sep 17 2019 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

நடப்பாண்டுக்‍கான மாநில மின்சார வாகன கொள்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாகன கொள்கை-2019-ஐ தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படும் மின்சார வாகனங்களுக்‍கு 2030 ஆம் ஆண்டு வரை மாநில ஜி.எஸ்.டி வரி 100 சதவீதம் திரும்ப வழங்கப்படும் என்றும், மின்சார வாகனங்களுக்‍கு 15 சதவீதமும், பேட்டரி உற்பத்திக்‍கான முதலீடுகளுக்‍கு 20 சதவீதம் வரையும் மூலதன மானியம் வழங்கப்படும் எனவும்​ தெரிவிக்‍கப்பட்டது. இந்த சலுகை 2025 ஆம் ஆண்டு வரை வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய நிறுவனங்கள், தொழிற்சாலை அமைக்‍க நிலம் வாங்கும் போது 100 சதவீத முத்திரைத்தாள் கட்டண விலக்‍கு அளிக்‍கப்படும் என்றும் 100 சதவீதம் மின்சார வரி விலக்‍கு வழங்கப்படும் எனவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. உணவகங்கள், வணிக வளாகங்கள் தியேட்டர்கள் போன்ற அனைத்து வணிக கட்டடங்களிலும் மின் ஏற்று வசதி ஏற்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. இருசக்‍கர வாகனங்களுக்‍கு 2022 ஆம் ஆண்டு வரை 100 சதவீதம் சாலை வரி விலக்‍கு அளிக்‍கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00