மழைக்காலத்தை எதிர்கொள்ள அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்களை மாவட்டந்தோறும் அமைக்க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Sep 23 2019 4:01PM
எழுத்தின் அளவு: அ + அ -

மழைக்காலத்தை எதிர்கொள்வதற்காக நடவடிக்கைகளை பழனிசாமி அரசு முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்காக அனைத்துத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்களை மாவட்டந்தோறும் அமைத்திட வேண்டும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மழைக்காலத்தை எதிர்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பழனிசாமி அரசு முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது - அடுத்தடுத்த நாட்களில் மழை பொழியும் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் கூறியிருக்கிறது - தற்போதைய சாதாரண மழைக்கே தலைநகர் சென்னை உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது - பல இடங்களில் மழைநீர் வடிவதில் இன்னமும் சிக்கல் உள்ளது - தேங்கி கிடக்கும் தண்ணீரால் கொசு உற்பத்தி அதிகமாகி மக்களை அவதிக்குள்ளாக்குவதாக திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

'சிறு மழைக்கே இந்த நிலை என்றால், வரப்போகிற மழைக்காலத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்' என்கிற கவலை மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது - அந்த அச்சத்தை போக்கும் வகையில், உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது - இப்போதாவது மழைக்காலத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உண்மையான முனைப்போடு அவர்கள் மேற்கொள்ள வேண்டும் - மழையால் ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களை தடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்வது மிகவும் அவசியம் என்றும் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ஆறுகளில் தண்ணீர் வந்த பிறகு தூர்வாரும் பணியை செய்து மக்களை ஏமாற்றுவதைப்போல் இதிலும் அலட்சியமாக செயல்படக்கூடாது - மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள மாநில அளவில் ஒரு சிறப்புக்குழுவையும், மாவட்டந்தோறும் அனைத்துத்துறை அதிகாரிகளையும் உள்ளடக்கிய சிறப்புக்குழுக்களையும் உடனடியாக அமைத்திட வேண்டும் என பழனிசாமி அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00