நீட் தேர்வு ஆள் மாறாட்ட புகார் தொடர்பாக தேனி அரசு மருத்துவக்‍ கல்லூரியில் போலீஸ் விசாரணை - கல்லூரி துணை முதல்வர், பேராசிரியர்களிடம் 5 மணிநேரம் நடைபெற்றதாக தகவல்

Sep 23 2019 4:46PM
எழுத்தின் அளவு: அ + அ -

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்ட புகார் தொடர்பாக தேனி அரசு மருத்துவக்‍ கல்லூரியில் துணை முதல்வர் மற்றும் பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சென்னை, தண்டையார்ப்பேட்டையை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து, தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்ததாக போலீசில் கல்லூரி டீன் ராஜேந்திரன் புகார் அளித்தார். இது தொடர்பாக தனிப்படை போலீசார், தலைமறைவான உதித்சூர்யா, அவரது பெற்றோரை தேடி வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்ற மாணவர்களின் விவரம் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்று வருகிறது. தேனி அரசு மருத்துவக்‍ கல்லூரியில் துணை முதல்வர், 3 பேராசிரியையிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை சுமார் 5 மணிநேரம் நீட்டித்தது.

இதனிடையே, கரூர் அரசு மருத்துவக்‍ கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்‍கப்பட்டது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00