டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க, தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க டிடிவி தினகரன் வலியுறுத்தல் - கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேண்டுகோள்

Oct 10 2019 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க, தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிடுமாறு, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திரு. டிடிவி தினகரன், வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், டெங்கு காய்ச்சல் பாதிப்பால், தமிழ்நாட்டில் அடுத்தடுத்து உயிரிழப்புகள் நிகழ்ந்து வருவதாகவும், குறிப்பாக குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நாள்தோறும் ஒவ்வொரு அரசு மருத்துவமனையிலும் குறைந்தபட்சம் 10 பேருக்காவது டெங்கு இருப்பது உறுதி செய்யப்படுவதாக வெளியாகியுள்ள தகவல், மிகவும் கவலை தருவதாக திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க, இதயதெய்வம் அம்மாவின் உண்மைத் தொண்டர்களான கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், அனைத்து மாவட்டங்களிலும், நகர, கிராமப் பகுதிகளிலும், பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வழங்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்வதாக திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

நிலவேம்பு கசாயம் தயாரிக்கத் தேவையான மூலப்பொருட்களை, "காதி கிராப்ட்" போன்ற அங்கீகரிக்கப்பட்ட இடங்களில் வாங்கி, தயாரித்து விநியோகிக்க வேண்டும் என்றும், டெங்கு கொசு உருவாக்கம் மற்றும் அதன் பாதிப்புகளைப் பற்றிய துண்டறிக்கைகளை வெளியிட்டு, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும் எனவும் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.30 Rs. 49000.00
மும்பை Rs. 49.30 Rs. 49000.00
டெல்லி Rs. 49.30 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.30 Rs. 49000.00