நெடுந்தீவு அருகே நடுக்‍கடலில் தமிழக மீனவர்கள் 7 பேர் கைது - இலங்கை கடற்படையினரின் தொடரும் அராஜகம்

Oct 10 2019 12:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
நெடுந்தீவு அருகே மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் 7 பேரை, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம், சக மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியக்‍ கடல் பகுதியில் மீன்பிடிக்‍கும் தமிழக மீனவர்கள் மீது தாக்‍குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும் இலங்கை கடற்படையினருக்‍கு வாடிக்‍கையாகிவிட்டது. அவ்வப்போது இந்திய கடல் பகுதியில் அத்துமீறி, மீனவர்கள் மீது தாக்‍குதல் நடத்துவது தொடர் கதையாகி வருகிறது.

நேற்றிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்‍ கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 7 பேரை, இலங்கை ரோந்து கடற்படையினர் கைது செய்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 7 மீனவர்களையும் கைது செய்த கடற்படையினர், அவர்களது மீன்பிடி உபகரணங்களையும், 2 விசைப் படகையும் பறிமுதல் செய்தனர். பின்னர் மீனவர்களை, காங்கேசன்துறை கடற்படை முகாமுக்‍கு அழைத்துச் சென்றனர். இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அராஜக செயல், தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.30 Rs. 49000.00
மும்பை Rs. 49.30 Rs. 49000.00
டெல்லி Rs. 49.30 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.30 Rs. 49000.00