மதுரை மாவட்ட ஆட்சியராக டி.ஜி.வினய் நியமனம் - 14 மாதங்களில் மதுரையில் 4 ஆட்சியர்கள் மாற்றம்

Oct 10 2019 1:05PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஆளுங்கட்சி தரப்பில் கொடுக்கப்பட்ட நெருக்கடியால், மதுரை ஆட்சியர் திரு. ராஜசேகர் விடுப்பில் சென்றுள்ளதாக தகவல் பரவிய நிலையில், தற்போது மதுரை புதிய ஆட்சியராக திரு. டி.ஜி.வினய் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, மதுரையில் ஓட்டு எண்ணிக்கை மையத்தில், பெண் தாசில்தார் திருமதி. சம்பூர்ணம் உள்ளிட்ட அதிகாரிகள் நுழைந்த விவகாரத்தில், ஆட்சியராக இருந்த திரு. நடராஜன் மாற்றப்பட்டார். தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, திரு. நாகராஜன் ஆட்சியராக பொறுப்பு ஏற்றார். இதையடுத்து, கடந்த ஜூ‌‌லை 1-ம் தேதி, சென்னை ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரிந்த திரு. ராஜசேகர், மதுரை ஆட்சியராக பொறுப்பு ஏற்றார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி, அவர், திடீர் விடுப்பில் சென்றார்.

ஆளுங்கட்சி தரப்பில் கொடுக்கப்பட்ட நெருக்கடியால் அவர் விடுப்பில் சென்றதாக, ஊழியர் வட்டாரங்கள் தெரிவித்த நிலையில், தற்போது மதுரை புதிய ஆட்சியராக, அரியலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. டி.ஜி.வினய் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 14 மாதங்களில் மதுரை மாவட்டத்திற்கு 4 ஆட்சியர்கள் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3653.00 Rs. 3907.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 49.30 Rs. 49000.00
மும்பை Rs. 49.30 Rs. 49000.00
டெல்லி Rs. 49.30 Rs. 49000.00
கொல்கத்தா Rs. 49.30 Rs. 49000.00