சென்னையில் ரயில் பயணியிடமிருந்து செல்போனை பறித்துச் சென்ற மர்மநபர் - வைரலாகும் வீடியோ காட்சி

Jan 3 2020 4:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி வருகின்றனர்.

திருவள்ளூர் தெற்கு மாவட்டம், வில்லிவாக்கம் ஒன்றிய கழகம் சார்பில், அயப்பாக்கம், போரூர் சுங்க சாவடி, வானகரம் உள்ளிட்ட 5 இடங்களில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், நிலவேம்பு குடிநீர், பப்பாளி ஆகியவற்றை, திருவள்ளூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. லக்கி முருகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது, வில்லிவாக்கம் ஒன்றிய கழக செயலாளர் திரு. பி. ரவி உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், சார்பு அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

நாகப்பட்டினம் தெற்கு மாவட்ட நாகூர் நகர கழகம் சார்பில் நாகூர் தர்கா முன்பு, நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியை மாவட்ட கழகச் செயலாளர் திரு. ஆர். சந்திரமோகன் தொடங்கி வைத்தார். நாகூர் நகர கழக செயலாளர் திரு. டெக்கரேசன் வீ. சுரேஷ் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் பங்கேற்று நிலவேம்பு குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கினர்.

திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்ட தென்காசி நகரக்‍ கழகம் சார்பில், நெல்லை மாவட்டம் தென்காசி பழைய பேருந்து நிலையம் மற்றும் மேலகரம் பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் திரு. பொய்கை சோ. மாரியப்பன், தென்காசி ஒன்றிய செயலாளர் பண்டாரம் உள்ளிட்ட கழகத்தினர் கலந்துகொண்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையம் அருகே, மாவட்ட கழகச் செயலாளர் திரு. எஸ். கலைச்செல்வன் தலைமையில், பொதுமக்களுக்‍கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. கழக அமைப்புச் செயலாளர் திரு. தேனாடு லட்சுமணன், கழக மருந்துவரணி மாநில இணைச் செயலாளர் Dr. செந்தில் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00