உதகை மலை ரயிலுக்கு இன்று 111-வது பிறந்த நாள் : சுற்றுலாப் பயணிகளுக்‍கு மலர்க்‍கொத்து வழங்கி வரவேற்பு

Oct 15 2019 7:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

சுற்றுலா பயணிகளை கவர்ந்து வரும் உதகை மலை ரயிலுக்கு இன்று 111-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை ரயிலில் பயணம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். பாரம்பரிய மிக்க இந்த மலை ரயில் சேவையானது மேட்டுபாளையம் - குன்னூர் - உதகை இடையே இயக்கப்பட்டு வருகிறது. நீராவி எஞ்சின் மூலம் இயங்கும் இந்த மலை ரயில் எழில் நிறைந்த வனப்பகுதி வழியாகவும், 10-க்கும் மேற்பட்ட குகைகள் வழியாகவும் மற்றும் 250 பாலங்கள் வழியாகவும் தினந்தோறும் இயக்கப்படும். இந்த மலை ரயில் சேவை 1908-ம் ஆண்டு அக்டோபர் 15-ந் தேதி தொடங்கப்பட்டதால், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 தேதி மலை ரயில் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த ஆண்டிற்கான 111-வது மலை ரயில் தினம் உதகை ரயில் நிலையத்தில் இன்று கொண்டாடப்பட்டது. மலை ரயில் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட பிறந்த நாள் விழாவில் மலை ரயிலில் வந்த சுற்றுலா பயணிகளுக்கு மலர் கொத்து வழங்கி வரவேற்பு அளிக்கபட்டது. பின்னர் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடபட்டது. இதனைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய ரயில்வே ஊழியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00