அனுமதியின்றி அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Oct 16 2019 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை அண்ணாநகரில் விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரம் சதுர அடி நிலத்தில் அனுமதியின்றி, அண்ணாநகர் டவர் கிளப் கட்டிய கட்டிடத்தை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1989ம் ஆண்டு துவங்கப்பட்ட அண்ணாநகர் டவர் கிளப்பிற்கு, சென்னை மாநகராட்சி ஒதுக்கிய 5 ஆயிரத்து 827 சதுர அடி நிலத்திற்கு அருகில், விஸ்வேஸ்வரய்யா பூங்காவுக்காக தேர்வு செய்யப்பட்டு காலியாக இருந்த 31 ஆயிரம் சதுர அடி நிலத்தையும் கிளப் பயன்படுத்தி வந்தது. அந்த நிலத்தில் அனுமதியின்றி கட்டுமானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதாலும், ஒப்பந்தத்தை புதுப்பிக்காததாலும், நிலத்தை பயன்படுத்தியதற்காக 48 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை செலுத்தி விட்டு, இடத்தை காலி செய்யும்படி, கிளப் நிர்வாகத்திற்கு 2012ம் ஆண்டில் மாநகராட்சி உத்தரவிட்டது.

இந்த உத்தரவை சென்னை உரிமையியல் நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து அண்ணாநகர் டவர் கிளப் நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி திரு. ஜெயசந்திரன், சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற வேண்டும் எனவும், அதை பழைய நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் எனவும் கூறி, டவர் கிளப் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00