வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவச் சிலைக்கு, கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை : கழகத்தினர், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

Oct 16 2019 12:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்திய விடுதலைப்போரில் தனி இடம் பெற்றவரும், சுதந்திரத்திற்காக தன் உயிரையே விலையாக கொடுத்தவருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் 220-வது நினைவு தினத்தை முன்னிட்டு, மதுரையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்திய விடுதலைப்போரில் தனியிடம் பெற்றவரும், ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறுதியோடு போரிட்டவரும், சுதந்திரத்திற்காக தன் உயிரையே விலையாக கொடுத்தவருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் 220-வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவச் சிலைக்கு, மரியாதை செலுத்த வருகை தந்த அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு, அலங்கரிக்‍கப்பட்ட யானை வரவேற்புடன், பம்பை மேளங்கள் முழக்‍கத்துடன் கழக நிர்வாகிகளும், பொதுமக்‍களும் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.

பெரியார் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருவுருவச் சிலைக்கு, கழக நிர்வாகிகள், தொண்டர்களுடன் சென்று, கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சியில், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், நிர்வாகிகள், சார்பு அணிகளின் செயலாளர்கள், நிர்வாகிகள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்டக் கழக, கிளைக்கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00