தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் விநியோகம்

Oct 16 2019 2:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் அறிவுறுத்தல்படி, தமிழகம் முழுவதும் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி வருகின்றனர்.

தூத்துக்‍குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்செந்தூரில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. தெற்கு மாவட்டக்‍கழகச் செயலாளர் திரு.புவனேஸ்வரன், திருச்செந்தூர் ஒன்றியச் செயலாளர் திரு.பொன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் தெற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில் கண்டமங்கலம் மேற்கு ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியினை மாவட்ட கழக செயலாளர் திரு.பாலசுந்தரம் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் திரு.ராஜசேகரன், மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி.அஸ்வினி சிலம்பரசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில் சங்கராபுரத்தில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் பணியினை கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.கோமுகி மணியன் தொடங்கி வைத்தார். வியாபாரிகள், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நகரக்‍கழகச் செயலாளர் திரு.ராம்குமார், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் திரு.உமர் பாட்ஷா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகரக்‍ கழகம் சார்பில் ஜெயங்கொண்டம் பேருந்து நிலையம் மற்றும் கடை வீதி என பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட கழக செயலாளர் துரை.மணிவேல், ஜெயங்கொண்டம் நகர கழக செயலாளர் திரு.முரளி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நாகை தெற்கு மாவட்ட கழகம், திருமருகல் ஒன்றிய கழகம் சார்பில், கங்களாஞ்சேரி கிராமத்தில் உள்ள கடை தெருவில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணியை மாவட்ட கழக செயலாளர் திரு.ஆர்.சந்திரமோகன் தொடங்கி வைத்தார். திருமருகல் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.முகம்மது பக்ருதீன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் பங்கேற்று நிலவேம்பு கசாயத்தை பொதுமக்களுக்கு வழங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00