ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை - இரண்டாவது நாளாக நடைபெறும் சோதனையையொட்டி போலீசார் குவிப்பு

Nov 8 2019 12:56PM
எழுத்தின் அளவு: அ + அ -
வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரை அடுத்து, ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரிதுறைத்துறையினர் இன்று, இரண்டாவது நாளாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில் ஜேப்பியார் கல்வி குழுமத்தின் சார்பில் பள்ளிக்‍கூடங்கள், கல்லூரிகள் போன்றவை செயல்பட்டு வருகின்றன. நடப்பு‍ கல்வி ஆண்டில், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், செம்மஞ்சேரியில் ஜேப்பியார் பொறியியல் கல்லூரி மற்றும் சூளைமேட்டில் உள்ள ஜேப்பியார் கல்வி குழும நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட 25 இடங்களில் நேற்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இரண்டாவது நாளாக இன்றும், 100-க்‍கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்து அதற்கான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல், கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியில் அமைந்திருக்‍கும் ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான மீன்பிடி துறைமுகத்தில் இன்று இரண்டாவது நாளாக வருமான வரி துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். அவர்கள் சோதனைக்கு வந்தபோது, அங்கு மீன் வாங்க வந்திருந்த வியாபாரிகள் ஓட்டம் பிடித்ததால், மீன்களை விற்பனை செய்ய முடியாமல் மீனவர்களுக்கு இழப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கு அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர். 11 பேர் கொண்ட குழுவினர், மீன்பிடி துறைமுகத்தில் உள்ள ஜேப்பியார் அலுவலகம், படகு தளம், ஆகிய விசைப்படகுகளின் எண்ணிக்கை அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது. இதனால் துறைமுக பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3663.00 RS. 3826.00
மும்பை Rs. 3716.00 Rs. 3816.00
டெல்லி Rs. 3711.00 Rs. 3831.00
கொல்கத்தா Rs. 3750.00 Rs. 3890.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.40 Rs. 48400.00
மும்பை Rs. 48.40 Rs. 48400.00
டெல்லி Rs. 48.40 Rs. 48400.00
கொல்கத்தா Rs. 48.40 Rs. 48400.00