அம்மா குடிநீர் திட்டத்தை முடக்கும் எடப்பாடி அரசு : நலத்திட்டங்களை முடக்குவது ஏன்? என பொதுமக்கள் கேள்வி

Nov 13 2019 2:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாண்புமிகு அம்மா கொண்டு வந்த "அம்மா குடிநீர் திட்டம்" தேனி மாவட்டத்தில் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளதால், பொதுமக்‍கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சுகாதாரமான குடிநீரை தமிழக மக்கள் பருக வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், மாண்புமிகு அம்மா "அம்மா குடிநீர் திட்ட"த்தை கொண்டு வந்தார். இது, மக்‍களின் பேராதரவை பெற்றது. ஆனால், அம்மாவின் ஆட்சி நடைபெறுவதாக கூறிக்‍கொள்ளும் எடப்பாடி அரசோ அம்மாவின் பல்வேறு மக்‍கள் நலத்திட்டங்களை தொடர்ந்து முடக்‍கி வருகிறது. அந்த வகையில், தேனி, போடி, ஆண்டிபட்டி, கம்பம் ஆகிய பேருந்து நிலையங்களில், சுத்திகரிக்கப்பட்ட அம்மா குடிநீர் பாட்டில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதனால் ஏராளமானோர் பயன் பெற்ற நிலையில், சிறிது சிறிதாக குறைக்‍கப்பட்ட அம்மா குடிநீர் விற்பனை, தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டு மக்‍களுக்‍கு துரோகம் இழைக்‍கப்பட்டுள்ளது. பல இடங்களில் அம்மா குடிநீர் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஒரு லிட்டர் தண்ணீரை 10 ரூபாய்க்கு வாங்கி பயன்பெற்ற பயனாளிகள், தற்போது 20 ரூபாய்க்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது பொதுமக்‍களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00