அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன், கழக நிர்வாகிகள் சந்திப்பு

Nov 13 2019 3:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

அண்மையில் திருமணமான தர்மபுரி மாவட்டம் ஜெக்கசமுத்திரம் ஊராட்சி கழக செயலாளர் லக்‌ஷ்மணன்- ரேணுகாதேவி தம்பதியர், அ.ம.மு.க. பொது செயலாளர் திரு.டிடிவி தினகரனை கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர். கழக துணை பொது செயலாளர் திரு.P.பழனியப்பன், தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் திரு. டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.

தர்மபுரி மாவட்ட பிரதிநிதி திரு.வி.டி.கருணாகரன்-மேரி ஆகியோர், தங்களது மகன் நிரஞ்சன்- திவ்யா ஆகியோரது திருமணத்திற்கு வருகை தருமாறு, திரு. டிடிவி தினகரனுக்‍கு திருமண அழைப்பிதழை கொடுத்து வாழ்த்து பெற்றனர். கழக துணை பொது செயலாளர் திரு.P.பழனியப்பன், தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் திரு. டி.கே. ராஜேந்திரன் ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.

கர்நாடக மாநில கழக அவை தலைவர் ஷிமோகா எம்.பி.சம்பத் மரியாதை நிமித்தமாக, திரு. டிடிவி தினகரனை சந்தித்தார். கழக துணைப் பொது செயலாளர் திரு.P.பழனியப்பன், தலைமை கழக பேச்சாளர் திரு. பாலசுப்பிரமணி, கர்நாடக மாநில பொது குழு உறுப்பினர் திரு.சபாபதி, தொகுதி செயலாளர் திரு.பிச்சாண்டி, பெங்களூர் நகர எம்ஜிஆர் மன்ற தலைவர் திரு.மணி ஆகியோர் அப்போது உடனிருந்தனர்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. ச.கணேசன், தனது 20-வது திருமண நாளையொட்டி, கழக பொது செயலாளர் திரு.டிடிவி தினகரனை சந்தித்து ஆசி பெற்றார்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகளான மாவட்ட கழக செயலாளர் திரு.மாதேவா, சூளகிரி ஒன்றிய செயலாளர் திரு. ராகவன், மாவட்ட துணை செயலாளர் திரு. மாரே கவுடா, மாவட்ட அம்மா பேரவை தலைவர் திரு.மாதேஷ்வரன், தளி ஒன்றிய செயலாளர்கள் திரு. வசந்த், திரு. நாராயணசாமி, ஒன்றிய துணை செயலாளர் திரு.வெங்கையா ஆகியோர், கழக பொது செயலாளர் திரு.டிடிவி தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00