தொடர்கதையாகிவிட்ட மாணாக்‍கர்களின் தற்கொலையை தடுத்துநிறுத்துவது எல்லோரின் கடமை : திரைப்பட இயக்‍குநர் ப.ரஞ்சித் வலியுறுத்தல்

Nov 14 2019 4:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

கல்வி அறிவில் சாதிப்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல என நிரூபிக்‍கும் மாணாக்‍கர்களின் மன உறுதியை திட்டமிட்டு சிதைக்‍கும் நோக்‍கிலேயே மாணவி பாத்திமாவின் மரணம் அமைந்துள்ளதாக திரைப்பட இயக்‍குநர் திரு.ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை சம்பவம் தொடர்பாக ப.ரஞ்சித் டுவிட்டரில் தனது கருத்தை பதிவிட்டுள்ளார். சமூகத்தில் இருக்‍கும் பல்வேறு தடைகளைத் தாண்டி, கல்வியில் சாதிக்‍க பெரும் கனவுகளுடன் உயர்கல்வி நிறுவனங்களில் நுழையும் மாணாக்‍கர்களை இப்படி சாதி மத வெறியில் பாகுபாடு காட்டி‍ கொல்வது தொடர்கதையாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

கல்வியறிவில் சாதிப்பது பிறப்பின் அடிப்படையில் அல்ல என்றும், எவரும் சாதிக்க முடியும் என்று நிரூபிக்கும் மாணாக்கர்களின் மன உறுதியை திட்டமிட்டே சிதைத்து கொண்டிருக்கிறார்கள் என்றும், இதை தடுத்து நிறுத்த வேண்டியது நமது எல்லோரின் கடமை என்றும் ப.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00