அ.ம.மு.க. சார்பில் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் : உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை

Nov 17 2019 6:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழக நிர்வாகிகளின் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது.

திருச்சி வடக்கு மாவட்டக் கழகத்திற்குட்பட்ட, மருங்காபுரி ஒன்றியக்கழக மற்றும் பொன்னம்பட்டி பேரூர் கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம், கழக தலைமை நிலையச் செயலாளர் திரு. ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கழகத்தின் சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட சூளுரை ஏற்கப்பட்டது. வரும் 22-ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்காக திருச்சிக்‍கு வருகை தரும் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரனுக்‍கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இ‌தில், ஒன்றிய கழக செயலாளர் திரு.பெருமாள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில், புளியங்குடியில் கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்‍ கூட்டத்தில், வ.உ. சிதம்பரம் பிள்ளையின் 83-வது நினைவு தினத்தை முன்னிட்டு, நெல்லையில் உள்ள அவரது மணி மண்டபத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக வருகை தரும் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு டிடிவி தினகரனுக்‍கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிப்பது மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் கழக வேட்பாளர்களை வெற்றி பெற செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புறநகர் வடக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. பொய்கை மாரியப்பன் முன்னிலையில், மாற்றுக் கட்சியை சேர்ந்த பலர் கழகத்தில் தங்களை இணைத்துக்‍கொண்டனர்.

மதுரை புறநகர் வடக்கு மாவட்ட கழக சார்பில், ஆலாத்தூர் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் பணிகள் மற்றும் கழக வளர்ச்சி குறித்த கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலாளர் திரு.செ.சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில், கழக தலைமை நிலைய செயலாளர் திரு.கே.கே.உமாதேவன் உள்ளிட்டோர் பங்‍கேற்றனர்.

இதே போல், மதுரை மாநகர் தெற்கு மாவட்ட கழக சார்பில், உள்ளாட்சித் தேர்தல் பணிகள் குறித்த கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் திரு.ஷ.ராஜலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இதில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்‍கேற்றனர்.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், ஓசூர் நகர கழகம், ஒன்றிய கழகம், தளி ஒன்றிய கழகம், சூளகிரி கிழக்கு, மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் திரு. மாதேவா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கழக துணை பொதுச் செயலாளர் திரு.பழனியப்பன் கலந்து கொண்டு, கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில், மாவட்ட கழக செயலாளர் திரு. எஸ்.காமராஜ் தலைமையில், கழக செயல்வீரர்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் வெற்றி குறித்து செயல்வீரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இதில், கழக அமைப்பு செயலாளர் திரு. சிவா.ராஜமாணிக்கம் உட்பட 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00