சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில், 75 மரங்களை வெட்டக் கூடாது - இடைக்கால தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்

Nov 21 2019 5:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில், கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக வெட்டப்பட இருந்த 75 மரங்களை வெட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகளின் வசதிக்காக கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு 4 ஏக்கர் பரப்பளவில் உள்ள 75 மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டது. மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்தும், மரங்களை வெட்டுவதற்கு தடை விதிக்கக்கோரியும் அதே பகுதியை சேர்ந்த கேப்டன் பி.பி. நாராயணன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், மருத்துவமனை வளாகத்தில் காலி நிலங்கள் உள்ள நிலையில், சுற்றுச்சூழலுக்‍கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவது சட்டவிரோதமானது என்றும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, எழும்பூர் கண் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு இடைக்கால தடை விதித்தனர்.

புதிய கட்டிடம் கட்டுவதற்கான மாற்று இடங்கள் என்ன? - தற்போதுள்ள மரங்களை பாதிப்பு ஏற்படாமல் வேறு இடங்களில் நட்டு பராமரிக்க வாய்ப்பு உள்ளதா? என மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00