மேட்டுப்பாளையத்தில், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து உறவுகளைப் பறிகொடுத்தவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை, அரசு உயர்த்தி வழங்க வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Dec 2 2019 8:49PM
எழுத்தின் அளவு: அ + அ -
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில், நியாயம் கேட்டுப்போராடிய மக்கள் மீது தடியடி நடத்தியதற்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த நிகழ்வு மிகுந்த வருத்தமளிப்பதாகவும், இந்த கோரச் சம்பவத்தில் பலியானோரின் உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சோகத்தில் நியாயம் கேட்ட மக்கள் மீது கண்மூடித்தனமாக காவல்துறையினர் தடியடி நடத்தியது கண்டிக்கத்தக்கது - இதற்குக் காரணமான காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் உறவுகளைப் பறிகொடுத்தவர்களின் குடும்பங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை, அரசு உயர்த்தி தர வேண்டும் எனவும் கேட்டுக்‍ கொண்டுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3600.00 RS. 3780.00
மும்பை Rs. 3670.00 Rs. 3770.00
டெல்லி Rs. 3665.00 Rs. 3785.00
கொல்கத்தா Rs. 3699.00 Rs. 3839.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.30 Rs. 47300.00
மும்பை Rs. 47.30 Rs. 47300.00
டெல்லி Rs. 47.30 Rs. 47300.00
கொல்கத்தா Rs. 47.30 Rs. 47300.00