கீழடியில் அடுத்த மாதம் தொடங்கவுள்ள கீழடி ஆய்வு முழுமையாக நடைபெற வேண்டும் - இந்திய தொல்லியல் துறை வல்லுனர்கள் வலியுறுத்தல்

Dec 9 2019 11:28AM
எழுத்தின் அளவு: அ + அ -

கீழடியில் ஜனவரி மாதம் தொடங்கவுள்ள ஆறாம் கட்ட அகழ்வாய்வு முழுமையாக நடைபெற வேண்டும் என இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்க்கலை இலக்கிய பேரவை சார்பில் சென்னை பெரியமேட்டில் கீழடியில் கிளைவிட்ட வேர் என்னும் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், தமிழ் தேசியப் பேரியக்க தலைவர் திரு. பெ.மணியரசன், திரைப்பட நடிகர் திரு.பொன்வண்ணன், தமிழ்க்கலை இலக்கிய பேரவை பொதுச்செயலாளர் திரு.முழுநிலவன், தலைவர் திரு.கவிபாஸ்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்திய தொல்லியல் துறை ஆய்வாளர் திரு.அமர்நாத் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்துனராக கலந்துகொண்டு மண் மூடிய தமிழர் வாழ்வு என்னும் தலைப்பில் உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரு. அமர்நாத் ராமகிருஷ்ணன், கீழடியில் ஜனவரி மாதம் முதல் ஆறாம் கட்ட அகழ்வாய்வு தொடங்கவுள்ளதாக தெரிவித்தார். இதுவரை நடைபெற்ற ஆய்வுகள் குறுகிய காலத்தில் செய்யப்பட்டவை என்று குறிப்பிட்ட அவர் ஆறாம் கட்ட ஆய்வை முழுமையாக செய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அகழ்வாய்வு வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00