கோயம்பேடு சந்தையில் வெங்காய விலை 30 ரூபாய் குறைந்து கிலோ 120-க்‍கு விற்பனை - சின்ன வெங்காயத்தின் விலையும் 130 ரூபாயாக குறைந்தது

Dec 9 2019 2:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயம் இன்று கிலோவுக்‍கு 30 ரூபாய் குறைந்து 120 ரூபாய் வரை விற்பனையாகிறது.

நாடு முழுவதும் வெங்காய உற்பத்தி பாதிக்‍கப்பட்டதால், இதற்கு முன் இல்லாத அளவுக்‍கு அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் இதற்கு முன் இல்லாத அளவுக்‍கு வெங்காயம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் அனைத்து தரப்பு மக்‍களும் கடுமையாக பாதிக்‍கப்பட்டிருக்‍கும் நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று பெரியவெங்காயம் கிலோ 120 ரூபாய்வரை குறைந்துள்ளது. நேற்றுவரை இந்த வெங்காயம் 160 ரூபாய் என விற்பனையானது.

இதேபோல், சாம்பார் வெங்காயம் எனப்படும் சின்ன வெங்காயமும் விலை குறைந்துள்ளது. சந்தைகளில் கிலோ 130 ரூபாய் வரை இது விற்பனையாகிறது. இதனால் இன்று காய்கறி வாங்க வந்த பொதுமக்‍கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வரக்‍கூடிய நாட்களில் வெங்காயம் விலை மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00