இந்திய தேர்தல் ஆணையத்தில் அ.ம.மு.க. தனிக்கட்சியாக பதிவு : தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கழகத்தினர் கொண்டாட்டம்

Dec 9 2019 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்காக, கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் மேற்கொண்ட தொடர் முயற்சிகளைப் பாராட்டி, தமிழகம் முழுவதும் கழகத் தொண்டர்களும், நிர்வாகிகளும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடசென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே. நகர் மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே ஊர்வலமாக வந்த கழகத்தினர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில், அமைப்புச் செயலாளர் திரு. நேதாஜி கணேசன், ஆர்.கே. நகர் பகுதி கழக செயலாளர் திரு.B. வெங்கடேசன், மாவட்ட மகளிரணி செயலாளர் திருமதி. பரிமளா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாகை வடக்கு மாவட்டம் செம்பனார்கோயில் வடக்கு ஒன்றியம் சார்பில், கழக நிர்வாகிகள் மேலமுக்கூட்டில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. கே.வி. ஜனார்த்தனம் மற்றும் திரளான கழக நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

இதேபோல் மயிலாடுதுறையில், மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ். செந்தமிழன் தலைமையில், அ.ம.மு.க.வினர் பேரணியாக சென்று பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மயிலாடுதுறை வடக்கு ஒன்றிய செயலாளர் பா. ராஜீ உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

நாகை தெற்கு மாவட்டம் வேதாரண்யம் நகர கழகம் சார்பில், நகர செயலாளர் திரு. இளங்கோவன், மாவட்ட அவைத் தலைவர் திரு. ஆறுமுகம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

மதுரை மாநகர் தெற்கு மாவட்டக்‍ கழகம் சார்பில், தலைமை நிலையச் செயலாளர் திரு. உமாதேவன், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் திரு. டேவிட் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் திரு. ஷ. ராஜலிங்கம் ஆகியோர் தலைமையில், கழகத்தினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக சார்பில் தலைமை நிலையச் செயலாளர் திரு. உமாதேவன், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் திரு. டேவிட் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் பேராசிரியர் மா.ஜெயபால் ஆகியோர் தலைமையில் கழகத்தினர் இனிப்புகள் பரிமாறி கொண்டாடி மகிழ்ந்தனர்.

திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், கழக அமைப்புச் செயலாளர் திருமதி. சாருபாலா தொண்டைமான், மாநகர் மாவட்டச் செயலாளர் திரு. ஜெ. சீனிவாசன் தலைமையில், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஊர்வலமாகச் சென்று தில்லைநகர் சாலையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். இதில் அவைத்தலைவர் ராமலிங்கம், அம்மா தொழிற்சங்க மாநில இணைச்செயலாளர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் சண்முகபுரம் பகுதி கழகம் சார்பில், திருச்செந்தூர் சாலையில், பொதுமக்‍களுக்‍கு இனிப்புகள் பரிமாறி கழகத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பகுதி பொறுப்பாளர் திரு. ஜான் சாமுவேல் தர்மராஜ், மாவட்ட தொழிற்சங்க இணைச்செயலாளர் சண்முக குமரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை நகர கழக அலுவலகம் முன்பாக, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. S. கலைச் செல்வன், கழக அமைப்புச் செயலாளர் திரு. தேனாடு லட்சுமணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

கோவை தெற்கு மாவட்டத்தின் சார்பில், கோவை மண்டல பொறுப்பாளர் திரு. சேலஞ்சர் துரை, மற்றும் கழக சிறுபான்மை துணை செயலாளர் தாராசபி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

கோவை மாநகர் வடக்கு மாவட்டத்தின் சார்பாக மாவட்ட செயலாளர் திரு. அலாவுதீன் தலைமையில் கவுண்டம்பாளையத்தில் உள்ள கட்சித் தலைமை அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டன. மாவட்ட அவைத்தலைவர் திரு.சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் திரு.பாஸ்கரன், மாவட்ட துணைத்தலைவர் திரு. கோகுலக்கண்ணன் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் இதில் கலந்துகொண்டனர்.

செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00