பருத்தி மூட்டைகளுக்கான தொகையை ரொக்கமாக வழங்க வலியுறுத்தி ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விவசாயிகள் போராட்டம்

Dec 9 2019 7:26PM
எழுத்தின் அளவு: அ + அ -

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி விவசாயிகளுக்கு ஏலத்திற்கு கொண்டு வந்த பருத்தி மூட்டைகளுக்கான தொகையை ரொக்கமாக வழங்க வேண்டுமென கேட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஹெக்டரில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் ராசிபுரம், வெண்ணந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிக அளவில் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளைந்த பருத்திகளை விவசாயிகள் கூட்டுறவு சங்கமான ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் நடைபெறும் ஏல விற்பனைக்கு கொண்டு வருவர். இவர்களுக்கான பருத்தி தொகை ரொக்கமாக வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 19 ஆயிரத்து 500க்‍கும் மேல் இருந்தால், காசோலையாக வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் வங்கிக்‍கு செல்வது, கால விரையம் ஏற்படுவது உள்ளிட்ட பிரச்னைகள் உள்ளதால், இதனை ரொக்கமாக வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஆர்.கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள ஏலமையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00