தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெங்காயம் பதுக்‍கிவைக்‍கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் - கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

Dec 10 2019 4:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.

வெங்காயத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் சமூக வலைதளங்களில் தினம்தோறும் விமர்சிக்கும் பொருளாக வெங்காயம் மாறியுள்ளது. இந்நிலையில் சில பகுதிகளில் வெங்காயம் பதுக்‍கி வைக்‍கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் ஜான் சுந்தர் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோயம்பேடு மார்க்கெட் உள்ள வெங்காய சேமிப்பு கிடங்கு மற்றும் வெங்காய விற்பனை கடைகளில் தமிழக அரசால் நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட அதிகமாக உள்ளதா என்றும், இருப்பு வைத்துள்ள வெங்காயத்திற்கு முறையான ரசீதுகள் வைத்துள்ளனரா என சோதனை செய்தனர். வெங்காயத்தை பதுக்‍கி வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00