திருச்சி மாவட்டத்தில் 70 அடி ஆழ கிணற்றில் விழுந்த பசுமாடு - தண்ணீரில் நீந்தியபடி மீட்ட தீயணைப்புப்படை வீரர்கள்

Dec 10 2019 9:40PM
எழுத்தின் அளவு: அ + அ -

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே 70 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து தத்தளித்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் நீந்தியபடி மீட்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வெள்ளைப்பூலாம்பட்டியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. மாடு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று அவரது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று 70 அடி ஆழகிணற்றில் தவறி விழுந்தது. தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் பசுமாட்டை மீட்க முயன்றனர். ஆனால் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் 20 அடி தண்ணீரில் பசுமாடு நீந்திக் கொண்டே இருந்ததால் மீட்க முடியவில்லை. உடனே இதுபற்றி மணப்பாறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரின் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரில் நீந்தியபடியே மாட்டை கயிற்றால் கட்டினர். பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுடன் சேர்ந்து மாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி பசுமட்டை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00