அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிறந்த நாள் கொண்டாட்டம் : கழகத்தினர் கோயில்களில் சிறப்பு வழிபாடு - பொதுமக்களுக்கு அன்னதானம்

Dec 15 2019 4:51PM
எழுத்தின் அளவு: அ + அ -

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரனின் பிறந்தநாளையொட்டி, பல்வேறு பகுதிகளில், கழகத்தினர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தியும், பொதுமக்‍களுக்‍கு அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடினர்.

திரு. டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, அச்சிறுபாக்கம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில், அச்சிறுபாக்கம் இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோவிலில் அபிஷேகம் அலங்காரம் ஆராதனைகள் செய்யப்பட்டது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு கழகத் தொண்டர்களுக்கும் அன்னதானம் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் திரளான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

செங்கல்பட்டு வடக்கு பகுதி கழக செயலாளர் திரு.லட்சுமிபதி தலைமையில் ஆதம்பாக்‍கத்தில் உள்ள கடும்பாடி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்ற பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழக செயலாளர் திரு. செம்மஞ்சேரி குணசேகரன் தலைமையில், செம்மஞ்சேரி சிக்னல் அருகே, 2 ஆயிரம் பேருக்‍கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணைச் செயலாளர் உமாதேவி, வட்டக் கழக செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தென்காசி மாவட்டம் பண்பொழியில் அமைந்துள்ள அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோவில், கழகம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் தங்கத்தேர் நான்கு ரத வீதிகளிலும் எடுத்து சென்று கழகத்தினர் வழிபாடு செய்தனர். நெல்லை புறநகர் வடக்கு மாவட்டக்‍ கழகச் செயலாளர் திரு. மாரியப்பன் உள்ளிட்ட கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

நெல்லை மாநகர் மாவட்ட கழகம் சங்கரன்கோவில் நகர கழகம் சார்பில், சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோமதி அம்பாள் திருக்கோவில், கோமதி அம்பாள் தங்கத் தேர் இழுத்து கழகத்தினர் வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. பரமசிவ ஐயப்பன், உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளான இதில் கலந்துகொண்டனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00