திண்டுக்கல் வடமதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் நடைமேடையை விரிவுபடுத்தக் கோரி, கிராம மக்கள் ரயில் மறியல் போராட்டம்

Dec 3 2017 3:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

திண்டுக்‍கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை ரயில் நிலையத்தில் பயணிகள் நடைமேடையை விரிவுபடுத்தக்‍ கோரி, கிராம மக்‍கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்‍கல் அருகே வடமதுரையைச் சுற்றி வளவிசெட்டிபட்டி, பெரியகோட்டை, பில்லமநாயக்‍கன்பட்டி, தென்னம்பட்டி உள்ளிட்ட 50-க்‍கும்மேற்பட்ட கிராமங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். வடமதுரை ரயில் நிலையத்தில், பயணியர் ரயில் மட்டும் நின்று செல்வது வழக்‍கம். இதன்மூலம், அப்பகுதியைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்‍கள், திருச்சி மற்றும் மணப்பாறையில் உள்ள பள்ளி கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்‍கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த ரயில் நிலையத்தில், பயணிகளின் வசதிக்‍காக அமைக்‍கப்படும் நடைமேடை மிகவும் குறுகலாக உள்ளதாகவும், இந்த நடைமேடை காரணமாக விபத்துகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்‍கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்‍கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்‍கையும் எடுக்‍கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், இன்று காலை மதுரையில் இருந்து திண்டுக்‍கல் வழியாக சென்னை நோக்‍கி வந்துகொண்டிருந்த வைகை எக்‍ஸ்பிரஸ் ரயிலை மறித்து, தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டம் காரணமாக, அப்பகுதியில் ரயில் போக்‍குவரத்து பாதிக்‍கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட நூற்றுக்‍கும் மேற்பட்ட பொதுமக்‍களை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00