செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வரும் நாசாவின் Opportunity கலம், அங்குள்ள பெரும் பள்ளத்தாக்கு ஒன்றை படம் எடுத்து அனுப்பியுள்ளது : பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பள்ளத்தாக்கு பிரம்மாண்டமான ஏரியாக இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருத்து

Jun 26 2017 1:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வரும் நாசாவின் Opportunity கலம், அங்குள்ள பெரும் பள்ளத்தாக்கு ஒன்றை படம் எடுத்து அனுப்பியுள்ளது. பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பள்ளத்தாக்கு பிரம்மாண்டமான ஏரியாக இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ வாய்ப்புள்ளதா என்பதை அறிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய நாசாவின் Opportunity என்ற நகரும் கலம், அங்கு தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. என்டவர் எனப் பெயரிடப்பட்டுள்ள பிரம்மாண்ட பள்ளத்தாக்கை இந்தக் கலம் தற்போது படம் எடுத்து அனுப்பியுள்ளது.இந்தப் பள்ளத்தாக்கு பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பிரம்மாண்டமான ஏரியாக இருந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதனை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக Opportunity கலத்தை பள்ளத்தாக்கின் உள்ளே இறக்கி, மேலும் ஆய்வுகளை மேற்கொள்ள விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இந்தக் கலம், பள்ளத்தாக்கின் கீழ்ப்பகுதியில் நகர்ந்து சென்று ஆய்வு நடத்தவுள்ளது.

Opportunity கலத்தின் ஆய்வின் மூலம், மேலும் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன. செவ்வாய்க் கிரக பள்ளத்தாக்கின் நீளம் 22 கிலோமீட்டராக இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. பள்ளத்தாக்கைச் சுற்றிலும் பாறைப் படிமங்கள் காணப்படுகின்றன. பள்ளத்தாக்கின் மேற்குப் பகுதியில் வடிகால் போன்ற அமைப்பு காணப்படுகிறது. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இது உபரிநீர் வழிந்தோடும் கால்வாயாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00