இந்தோ-நார்டிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவீடன் சென்ற பிரதமர் நரேந்திரமோடியை பிரதமர் ஸ்டீபன் லோப்வன் நேரில் வரவேற்பு

Apr 17 2018 12:25PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தோ-நார்டிக் மாநாட்டில் பங்கேற்பதற்காக சுவீடன் சென்ற பிரதமர் திரு. நரேந்திர மோடியை, அந்நாட்டு பிரதமர் Stefan Lofven நேரில் சென்று வரவேற்றார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி 5 நாள் அரசு முறைப் பயணமாக சுவீடன், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் சென்றடைந்த பிரதமர் திரு. நரேந்திர மோடியை, அந்நாட்டு பிரதமர் Stefan Lofven விமான நிலையத்தில் வரவேற்றார். அந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளியினரும் ஆரவாரத்துடன் வரவேற்பு அளித்தனர்.

ஸ்டாக்‍ஹோமில் இன்று, முதல் முறையாக நடைபெறும் சுவீடன், நார்வே, பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து ஆகிய நாடுகளை கொண்ட கூட்டமைப்பின் முதல் உச்சி மாநாட்டில் பிரதமர் திரு. மோடி கலந்துகொண்டு பேசுகிறார்.

இந்த மாநாட்டில் வர்த்தகம், முதலீடு, சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பருவநிலை மாற்றம் தொடர்பாகவும் இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துகின்றனர். 30 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர், இந்தியப் பிரதமர் ஒருவர் சுவீடன் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து லண்டனில் 3 நாட்கள் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் திரு. மோடி, மேலும் லண்டன் டவுன் ஹாலில் பிரிட்டன் வாழ் இந்தியர்களிடையே சிறப்புரையாற்றுகிறார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00