அனைத்துலக எழுத்தறிவு தினம் : கடந்த 2016ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் 74 சதவீதம்

Sep 8 2019 7:03PM
எழுத்தின் அளவு: அ + அ -
அனைத்துலக எழுத்தறிவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு மக்‍கள்தொகை கணக்‍கெடுப்பின்படி, நாட்டில் எழுத்தறிவு பெற்றவர்கள் 74 சதவீதமாக உள்ளனர்.

ஆண்டுதோறும் செப்டம்பர் 8ம் தேதியை, உலக எழுத்தறிவு நாளாக யுனெஸ்கோ நிறுவனம், கடந்த 1965ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி பிரகடனம் செய்தது.

எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்கள், சமூகம், அமைப்புகளை அறியவைப்பதே ​இதன் முக்கிய நோக்கமாகும்.

கல்விக்கு அடிப்படையாக விளங்குவது எழுத்தறிவு - இது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை - எழுத்தறிவு பெற்றால்தான், ஜனநாயகத்தில் உரிமைகளை நிலை நாட்ட முடியும் - சமூக மற்றும் மனித முன்னேற்றத்துக்கு இது அவசியம் - எனவே எழுத்தறிவு பெறுவது ஒருவரின் கடமை, அவசியம், கட்டாயம்.

உலகில் அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக செப்டம்பர் 8-ம் தேதி உலக எழுத்தறிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஏதாவது ஒரு மொழியில், புரிதலுடன் சரியாக பேசவும், எழுதவும் தெரிந்தவரே எழுத்தறிவு பெற்றவர். மற்றபடி, எழுத்தறிவு பெற்றவராக கருத, குறிப்பிட்ட வகுப்பு வரை படித்திருக்க வேண்டும் என எந்த அளவும் தீர்மானிக்கப்படவில்லை.

வளரும் நாடுகளில் 6 வயது முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளில் 15 சதவீதம் பேர் பள்ளிக்‍குச் செல்லவில்லை என யுனெஸ்கோ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கடந்த 2016ம் ஆண்டு மக்‍கள்தொகை கணக்‍கெடுப்பின்படி, இந்தியாவின் எழுத்தறிவு, 74 சதவீதமாக உள்ளது - இதில் ஆண்கள் 82 புள்ளி ஒன்று நான்கு சதவீதமும், பெண்கள் 65 புள்ளி நான்கு ஆறு சதவீதமும் உள்ளனர்.

தமிழக எழுத்தறிவு சதவீதம், 80 புள்ளி 4 சதவீதமாக உள்ளது. இது 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பைவிட ஆறு புள்ளி 9 சதவீதம் அதிகம். எழுத்தறிவில் கேரளா முதலிடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3611.00 Rs. 3768.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.50 Rs. 50500.00
மும்பை Rs. 50.50 Rs. 50500.00
டெல்லி Rs. 50.50 Rs. 50500.00
கொல்கத்தா Rs. 50.50 Rs. 50500.00