தலையில் ஏற்பட்ட கட்டியால் சின்னஞ்சிறு வண்ண மீன் அவதி - அறுவை சிகிச்சை செய்து ஆஸ்திரேலிய மருத்துவர்கள் சாதனை

Sep 16 2014 5:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

தலையில் கட்டி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த அலங்கார மீனுக்கு, மருத்துவர்கள் அவசரகால அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தியுள்ளனர். தற்போது அந்த மீன் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.

ஆஸ்திரேலியாவின் மெல்ஃபர்ன் நகரில் வசிக்கும் Pip Joyce என்பவர் பலவகையான அலங்கார மீன்களை வீட்டில் வளர்த்து வருகிறார். இவற்றில் "ஜார்ஜ்" என்று செல்லமாக அழைக்கப்படும் தங்கமீன், உணவருந்த முடியாமலும், நீந்த முடியாமலும் அவதிப்பட்டது. மேலும், அந்த மீனின் தலையில் கட்டி ஒன்று ஏற்பட்டிருந்தது. இதனை கவனித்த மீனின் உரிமையாளர் Pip Joyce, அந்த தங்க மீனை உடனடியாக Lort Smith கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மீனை பரிசோதித்த Tristan Rich என்ற மருத்துவர், உடனடியாக மீனுக்கு மயக்க மருந்து கொடுத்து தண்ணீரிலேயே அறுவை சிகிச்சை மேற்கொண்டார். கட்டி அகற்றப்பட்ட போதிலும், மீனின் மேற்தோலை பொருத்திய தையல்கள் புடைப்பாக இருப்பதால் பழைய அலங்கார தோற்றம் மறைந்துவிட்டது. இருப்பினும் பூரண குணமடைந்த அந்த மீன், இன்னும் 20 ஆண்டுகள் உயிர்வாழும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அந்த மீன் தனிமைப்படுத்தப்பட்டு வாளியில் நிரப்பப்பட்ட நீரில் உற்சாகமாக நீந்தி வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00